காஞ்சிபுரம், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான வரும் வரும் 22ஆம் தேதி திருத்தேர் வீதி உலாவும், 25 ஆம் தேதி இரவு வெள்ளி ரத வீதி உலா நடைபெறவுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள சைவ சமய திருத்தலங்களில் பிரசித்திபெற்றது கச்சபேஸ்வரர் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் இன்று அதிகாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இரவு 7 மணியளவில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர், சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
பிரம்மோற்சவத்தில் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் சூரியபிரபை, சந்திரபிரபை, பூத வாகனம், திருக்கயிலைக் காட்சி, நாக வாகனம், இடப வாகனம், அதிகார நந்தி சேவை, சப்பரம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகன சேவை நடைபெறவுள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான வரும் வரும் 22ஆம் தேதி திருத்தேர் வீதி உலாவும், 25 ஆம் தேதி இரவு வெள்ளி ரத வீதி உலா நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.