கும்பகோணம், ஜன. 24 –

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த  சுமார் 285 ஹெட்டேர் பரப்பளவு கொண்ட கச்சத்தீவை கடந்த 28.06.1974 ஆம் ஆண்டு அப்போதைய பாரத பிரதமராகயிருந்த இந்திரா காந்தி அம்மையாரால்‌ இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுக்கப்பட்டது.

அவ் ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மீனவர்கள் மீன் பிடித்துக் கொள்ளலாம், வலைகளை உலர வைக்கலாம், அந்தோனியார் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு 1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரு நாடுகளின் அதிகாரிகளுக்கிடையே நடைப்பெற்ற மீன் பிடி உரிமை ஒப்பந்தம் செய்ததின் அடிப்படையில் கட்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கவோ வலைகளை உலர வைக்கவோ, அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளவோ தடை விதிக்கப்பட்டது.

அதனால் அன்று முதல் இன்று வரை அப்பகுதியில் மீன் பிடிக்க தமிழ்நாட்டு மீனவர்கள் வந்தார்கள் எனக்கூறி 800-க்கும் மேற்பட்டவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்பட்டுள்ளார்கள்.

ஆனால் இதுவரை மத்திய, மாநில அரசுகள் கட்சத்தீவின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மத்திய மாநில அரசுகள் தமிழ்நாட்டு மீனவர்களின் நலன்களை பாதுகாக்க தவறி இருக்கிறது. எனவும்,

மேலும் வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கட்சத்தீவை மீட்க தணி கவன ஈர்ப்பு தீர்மானத்தினை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் எனவும், மேலும் தற்போது எதிர்வரும் இந்தியக்குடியரசு தினத்தன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வாயிலாக நாளை மறுதினம் கச்சத்தீவில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் மேலும்,

இலங்கை சிங்கள கடற்படையினரால் துப்பாக்கியால் தொடர்ந்து தமிழக மீனவர்களை சுட்டுக் கொள்வதை தடுக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தியும் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் பக்தபுரி ரவுண்டானா அருகே மீன்பிடி வலை, பொம்மை துப்பாக்கி, தேசியக்கொடியுடன் கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுப்பட்டனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டம் மாநில பொதுச் செயலாளர் பாலா தலைமையில் நடைபெற்றது. இதில்  மாவட்ட பொதுச் செயலாளர் தினேஷ்  மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட அமைப்பாளர் அரவிந்த், நகர தலைவர் பிரபாகரன் சித்தர் பேரவை மாவட்ட தலைவர் பாரதிதாசன் சிவசேனா நகர தலைவர் ஆனந்த் சிவசேனா நகர இளைஞரணி தலைவர் கமலக்கண்ணன், நிர்வாகிகள் பிரவீன் நடராஜ், கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

தொடர்ந்து  துப்பாக்கியுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது,கிழக்கு காவல்துறையினர் பொம்மை துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து கோட்டாட்சியர் வாயிலாக தமிழக முதலமைச்சருக்கு அவர்கள் கோரிக்கை மனுவினை அனுப்பிவுள்ளதாக தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here