காஞ்சிபுரம், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ..
108 திவ்ய தேசங்களில் 75 வது வைணவத் தலமாகவுள்ள பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், கஜேந்திர மோட்சம் நடைபெற்ற சிறப்புக்குரிய காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள புஷ்பவல்லித்தாயார் சமேத அஷ்டபுஜப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் 75 வது வைணவத் திருத்தலமாக விளங்கும் இத்திருக்கோயிலில் மூலவர் 8 திருக்கரங்களை உடையவராகவும், மேலும் கஜேந்திர மோட்சம் நடந்த சிறப்புக்கும் உரியதாகவும் அஷ்டபுஜப் பெருமாள் கோயில் திகழ்வதாக திருத்தல வரலாறு தெரிவிக்கிறது.
மேலும் அத்திருக்கோயிலில் கடந்த 9.12.2021 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்வதற்காக பாலாலயம் செய்யப்பட்டு ஆலயம் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் தொடர்பான யாகசாலை பூஜைகள் பிப். 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து மூலவருக்கும் உற்சவருக்கும் 108 கலச சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்று, மேலும் பல்வேறு புன்னிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அத்திருக்கோயிலின் கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு, காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அவ்விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.