சென்னை, ஆக. 06 –

கடந்த 9 .11 . 2022 ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவிக்கும் போது, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிப்புரியும் அனைத்து நிலை ஊழியர்களும், பத்திரிகையாளர்கள் நலவாரியத்தில் சேர்ந்திடும் படி அறிவித்தார்.

அமைச்சரின் அவ்வறிவிப்பு,  அனைத்து பத்திரிகையாளர்களின் மத்தியில் பெரும் வரவேற்பையும், மகிழ்வையும் ஏற்படுத்தியது.  ஆனால் தற்போது வரை செய்தித்துறை வாயிலாக வழங்கப்படும் அரசு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே நலவாரியத்தில் உறுப்பினராக இணைத்தும் அவர்களுக்கு மட்டுமே நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

உண்மை நிலை என்னவெனில், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அரசு தரப்பில் வழங்கப்படும் அடையாள அட்டைகள் 4 முதல் 10 வரை மட்டுமே, இந்நிலையில் பல்வேறு நிறுவனங்களில் பணிப்புரியும் 100 க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் மற்றும் டெக்னிசியன்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் பணிப்புரிந்து வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் மாவட்டம் மற்றும் தாலூகா அளவில் செய்தி சேகரித்து வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தலைமைச்செயலகத்திலும் பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் தங்களை இணைத்துக்கொள்ள விண்ணப்பங்கள் வழங்கிடும் போது அவர்களின் விண்ணப்பங்கள் அரசு அடையாள அட்டை இல்லைநென நிராகரிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

 

மேலும், இதுக்குறித்து பலமுறை துறைச்சார்ந்த அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் அரசு மேற் கொள்ளாமல் அவர்கள் அனைவரும் வீண் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக அப்பணியில் ஈடுப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான செய்தியாளர்கள் அரசு நல்லெண்ணத்துடன் தொடங்கிய பத்திரிகையாளர் நல வாரியத்தில் தங்களை இணைத்துக் கொள்ள முடியாமலும், அரசின் பலனளிக்கக் கூடிய சலுகைகளை அவர்கள் பெற முடியாமலும், பெருத்த சிரமத்துடனே அப்பணியை உள்ளார்ந்த ஈடுபாடுடன் செய்து வருகிறார்கள்.

 

அதனால் உண்மை நிலையறிந்து எந்நோக்கத்திற்காக அரசு நல வாரியத்தை ஏற்படுத்தியதோ, அந்நோக்கம் நிறைவேற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துறைசார்ந்த மாண்புமிகு அமைச்சர் அவர்களும் இப்பிரச்சினைக் குறித்து ஆய்வு நடத்தி, செய்திதுறையில் பயணிக்கும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கிட அரசு நிலை ஆணை வெளியிடவேண்டும் என தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் மு.தமிழவன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here