கும்மிடிப்பூண்டி, டிச. 25 –

கும்மிடிப்பூண்டி அடுத்த மேட்டு காலனி பகுதியில், திறப்பின் சுவிஷேச சபை உள்ளது. இத் திருச்சபையில் கிறிஸ்மஸ் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அவ்விழாவிற்கு, அத்தேவாலயத்தின் பாஸ்டரும் வழக்கறிஞருமான எம்.புருஷோத்தமன் தலைமை தாங்க, போவாஸ், ஜசக், சகரியா, ஜெயசீலன், ஏலேசியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து மேட்டுகாலனி, நங்கப்பள்ளம் ஆகிய பகுதிகளில் சேர்ந்த பொதுமக்கள் சிறுவர்கள் கிறிஸ்மஸ் தாத்தா வேடம், அணிந்தும் பாடல்கள் பாடியும், மாட்டு வண்டியில் இயேசு பிறப்பை வடிவமைத்து மேட்டு காலனியில் இருந்து கும்மிடிப்பூண்டி பஜார், கோட்டக்கரை, ரெட்டம்பேடு, நகரின் மற்றும் பல்வேறு பகுதிகள் வழியாக அவ்வூர்வலம் வந்தது.

மேலும் அந்நிகழ்வின் போது, பஜார் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகளும் குழந்தைகளுக்கு பென்சில் வழங்கியும் கிறிஸ்துமஸ் அவ் ஊர்வலத்தில் வந்தவர்கள் தங்களை வாழ்த்துக்களை அவர்களிடம் பகிர்ந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here