பட்டுக்கோட்டை, மே. 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பார்கள் ஆனால் பெண்ணான என் வெற்றிக்கு பின்னால் என் கணவர் இருக்கிறார் எனக்கு வழங்கும் விருதை என் கணவர் வாங்கி கொள்ள வேண்டும் என கூறி மாமா வாங்கனு கணவரை கூப்பிட்டு விருது வாங்க வைத்து மகிழ்ந்தார் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் சரோஜா. மேலும் அவர் மாமா என மேடையில் இருந்து தனது கணவரை கூப்பிட்டதும் சிரிப்பலையில் அரங்கமே அதிர்ந்தது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறந்த மகளிருக்கான விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. அதில் விழா ஒருங்கிணைப்பாளர் பிரபா மற்றும் சிறப்பு விருந்தினராக சசிசீலா மற்றும் பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாஸ்கரன் கலந்து கொண்டனர்.

அவ்விழாவில் காவல்துறை,  கலைத்துறை, சமூக ஆர்வலர்கள், தனெனார்வலர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும் 50 மகளிர்கள் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினரான பட்டுக்கோட்டை நகர காவல் துறை கண்காணிப்பாளரிடம் விருது பெற வந்த பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் சரோஜா ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பார் என்பார்கள் ஆனால் பெண்ணான என் வெற்றிக்கு பின்னால் என் கணவர் இருக்கிறார் எனவே இவ்விருதினை என் கணவர் பெற்றுக்கொள்ள வேண்டும் என டிஎஸ்பி யிடம் அனுமதி கேட்டுக்கொண்டு மேடையில் இருந்தவாறு மாமா வாங்கன்னு தனது கணவரை தலைமை காவலர் சரோஜா கூப்பிட்டதும் கூட்ட அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது அதனைத் தொடர்ந்து, மேடைக்கு வந்த தலைமை காவலர் சரோஜாவின் கணவர் விருதினை பெற்றுக் கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here