தஞ்சாவூர், மே. 02 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சாவூர் மாவட்டம், மேகதாது அணைக் கட்ட ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மேகதாட்டு அணை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் நூதனமுறையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி விவசாயி ஒருவரை உயிரிழந்த சடலம் போல் தூக்கி வந்து காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு அவரைப் படுக்க வைத்து மேலும் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடதினர். அப்போது அப் போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுத்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும் மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.  தமிழ்நாட்டின் காவிரி உரிமையை தடுத்து நிறுத்திட வேண்டும் ராசி மணல் அணை கட்டுமானத்தை துவங்கிட வேண்டும்

மேகதாது அணைக்கட்ட ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மேகதாது அணை எதிர்ப்பு போராட்ட குழுவினர் சஞ்சய் ஆற்றுப்பாலத்தில் இருந்து விவசாயி ஒருவரை சடலம் போல் தூக்கி கொண்டு பேரணியாக நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் சென்றனர்.

அலுவலகம் முன்பு சடலம் போல் நடித்த விவசாயியை படுக்க வைத்து  முற்றுகையிட்டனர். அதனைத் தடுத்த காவல் துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே சிறய அளவிலான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here