திருவள்ளூர், ஏப். 13 –

திருவள்ளூர் மாவட்டம்,காட்டூரில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிட நலத் துவக்கப் பள்ளியானது கடந்த 1941 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு முன் தொடங்கப்பட்டு 82 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

மேலும் இப்பள்ளி ஆரம்ப நிலையில் மிகக்குறைந்த அளவிலான மாணவர்களுடனே துவக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில், இப்பள்ளி இன்று அப்பள்ளியின் உதவி ஆசிரியர் இளங்கோ மற்றும் தலைமை ஆசிரியை ரத்னாவதி ஆகியோரின் தொடர் முயற்சியால் தற்போது பள்ளியின் கட்டமைப்பு வசதி, மற்றும் உயர்ந்த கல்வித் தரத்தில் கல்வி கற்ப்பிக்கப்பட்டு, தற்போது பல நூறு மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் நற்கல்விப் பயின்று வருகின்றனர்.

மேலும் இப்பள்ளி பவள விழாவினைக் கடந்து தற்போது 82 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதைத் தொடர்ந்து இப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் பவள விழா என இருபெரும் விழாவினை சிறப்பாக கொண்டாடுவதென அப்பள்ளி நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்கள் முடிவெடுத்து அதற்கான விழா இன்று அப்பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைப்பெற்றது.

மேலும் அவ்விழாவிற்கு காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் கே.சி. செல்வராமன், பொன்னேரி தனி வட்டாட்சியர் சித்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

மேலும் அவ்விழாவினை முன்னிட்டு அப்பள்ளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில்  பங்கேற்ற வெற்றிப்பெற்ற பள்ளிக் குழந்தைகளுக்கு அச்சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.

மேலும் சுதந்திரக் காலத்திற்கு முன்பு துவக்கப்பட்ட இப்பள்ளியில் தற்போது  படித்து வரும் சுதந்திர இந்தியாவின் மாணவர்களின் பெற்றோர்களும், மேலும் அக்கிராம பொதுமக்களும் அப்பள்ளிக்கு தேவையான பீரோ, ஃபேன், அமரும் இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சீர்வரிசையாக அப்பள்ளிக்கு வழங்கினார்கள்.

மேலும் அப்பள்ளியில் நடைப்பெற்ற விளாயாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. மேலும் அதில் பங்கேற்ற அப்பள்ளி மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி தங்களுக்கும் தான் கல்வி பயிலும் அப்பள்ளிக்கும் பெருமைச் சேர்த்தனர்.

மேலும், இவ்விழாவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரேவதி சண்முகம், கிராமத் தலைவர் ரமேஷ், காட்டூர் காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம், காட்டூர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை செல்லம்மாள், வார்டு உறுப்பினர்கள் நந்தினி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபா மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேவன், வான்மதி, லட்சுமி பிரியா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கிராம பொதுமக்கள் என திரளானவர்கள் இவ்விழாவில் பங்கேற்று மேலும் இவ்விழா மிகச்சிறப்படையச் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here