மயிலாடுதுறை, ஏப். 26 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…

மயிலாடுதுறை மாவட்டம், திருவிழந்தூர் மகா மாரியம்மன் ஆலய 42 ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் பால்குடங்களை பக்தர்கள் தலையில் சுமந்தவாறு முக்கிய விதிகள் வழியாக வான வேடிக்கை மேள தாள வாத்தியங்கள் முழங்க காளி ஆட்டங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது.

பின்னர் பக்தர்கள் சுமந்து வந்த பாலினை கொண்டு மகா காளியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதணை காண்பிக்கப்பட்டது. மேலும் அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அருள் பிரசாதமும், சுவாமி பிரசாதமும் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here