கும்பகோணம், டிச. 31 –

கும்பகோணம் அருகே உள்ள அன்னை கல்வி குழுமம் சார்பில் பல் தொழில்நுட்ப கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மாநில அரசு உரிமையியல் வழக்கறிஞர் கலந்து கொண்டு 881 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

அன்னை கல்வி குழுமம் சார்பில் பல் தொழில்நுட்ப கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா பல் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் அன்னை கல்வி குழு தலைவர் அன்வர் கபூர் தலைமையில் நடைபெற்றது.

இதில் தாளாளர் அப்துல் கபூர் கல்லூரி முதல்வர் சபாநாயகம் தேர்வு அலுவலர் சாமிநாதன் துணை முதல்வர் ராஜா குமார் நிர்வாக அதிகாரி கௌதம், மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில அரசு உரிமையியல் வழக்கறிஞர் பாலமுருகன் உரை நிகழ்த்தும் போது, இந்திய மொழிகளுடன், அயல்நாட்டு மொழி தெரிந்து வைத்திருப்பது அவசியம் எனவும், மேலும், தொடர்பு திறன், கூட்டு முயற்சி இப்போது அனைத்து நிறுவனங்களாலும் கவனிக்கப்படுகிறது.எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரை நிகழ்த்தும் போது, புதுமை படைப்புகளை உருவாக்க அனைவரும் முன் வர வேண்டும், எனவும், அப்போது அவர் தெரிவித்தார். தொடர்ந்து 881 மாணவ மாணவிகளுக்கு பட்டயங்களை வழங்கி மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here