தஞ்சாவூர், பிப். 16 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சை மாநகரில் உள்ள ஸ்ரீ ஆனந்த குபேர சாய்பாபா திருக்கோவிலில் வருடாபிஷேக விழா வெகுச்சிறப்பாகநடைப் பெற்றது. அதனை முன்னிட்டு அவ்வாலயத்தில் சிறப்பு ஹோமம் மற்றும் சாய்பாபாவுக்கு கலாசாபிஷேகம் நடைபெற்றது. அந்நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வழிபட்டு உளம் மகிழ்ந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரை அடுத்துள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் அருள்மிகு. ஸ்ரீஆனந்த குபேர சாய்பாபா திருக்கோவில் அமைந்துள்ளது.

 

மேலும் அவ்வாலயத்தின் வருடாபிஷேகம் விழா வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.

அதனை முன்னிட்டு, ருக் யஜூர், சாமம், அதர்வனம் ஆகிய நான்கு வேதங்களில் சிவாச்சாரியர்களால் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, பூரணா ஹதியுடன் யாக சாலை பூஜை நிறைவடைந்தது.

தொடர்ந்து, யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியங்கள் இசையுடன் கலச நீர் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் கலச நீரை கொண்டு சாய்பாபாவுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அந்நிகழ்வில் ஏராளமான சாய்பாபா பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பங்கேற்று சாய்பாபாவை உளம் நெகிழ்ந்து வழிபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here