திருவாரூர், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வாசிப்பு இயக்க துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில்… மாவட்ட தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற ‘வாசிப்பு இயக்கம்’ துவக்க விழாவில்.. வாசிப்பு பற்றிய முக்கியத்துவத்தை குறித்து பாடல்களாக பாடினர். மேலும் அவ்விழாவில் கலந்து கண்ட வாசகர்கள் தாங்கள் படித்த புத்தகங்கள் குறித்து விமர்சனங்களை முன் வைத்தனர்..
இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பகவன்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் யேசுதாஸ் முன்னிலை வகித்தார். மேலும், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தியாகராஜன், வேதரெத்தினம், நோக்கவுரை நிகழ்த்தினர். வாசிப்பு இயக்கத்தின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட பொருளாளர் செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக நிகழ்ச்சியை எழுத்தாளர் ஐ.வி. நாகராஜன் துவக்கி வைத்து துவக்க உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து மேனாள் மாநிலத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ‘நவீன காலத்தில் டிஜிட்டல் மீடியா அதிகமாகி மக்கள் அனைவரும் அதில் ஒன்றிவிட்ட நிலையில் புத்தகம் வாசிக்கும் சூழல் குறைந்துவிட்டது… எனவே வரும் காலங்களில் இளைஞர்கள் அனைவரும் புத்தகம் வாசிப்பது மிக அவசியம் என பேசினார். தொடர்ந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆரூர் மகாலிங்கம் நன்றி கூறினார்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டகுழு கிளை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.