காஞ்சிபுரம், செப். 21 –

காஞ்சிபுரம், தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 14 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தொலைதூர பள்ளி மாணவர்கள் தடையில்லாமல் கல்வி கற்கும் வகையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இலவச மிதிவண்டிகளை அந்தந்த தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் கீழ் இயங்கும் டாக்டர் பிஎஸ் சீனிவாசன் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 150 மாணவர்களுக்கு இன்று இலவச மிதிவண்டிகளை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.

விழாவில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் பேசிய போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு பல்வேறு உயர் கல்வி சார்ந்த விழிப்புணர்வுகள் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வழங்கி வருகிறது எனவும், அதனை மாணவர்கள் நன்றாக பயன்படுத்திக்கொண்டு தங்களின் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் மேலும் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து விரிவாக உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் கணேசன் திமுக நிர்வாகி மாமல்லன் தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here