கும்பகோணம், ஜூலை. 24 –

கும்பகோணம் அருகே உள்ள முருகப்பெருமானின் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு நேற்றிரவு நடைப்பெற்ற தெப்போற்சவம் நிகழ்ச்சி.

மேலும் இந்நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட மழை தூறலை பொருட்படுத்தாமல் தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் தொடர்ந்து நேத்தரபுஷ்கரணியில் பல வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தெப்பத்தில் சுவாமி எழுந்தருள  தெப்போற்சவமும் மிச்சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிநாதசுவாமி திருக்கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடு ஆகும், கட்டுமலை கோவிலான இதில், 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக இருந்து இத்தலத்திற்கு வரும் முருக பக்தர்களுக்கு சேவை செய்வதாக ஐதீகம், மேலும் தந்தை சிவபெருமானுக்கே ஓம் எனும் பிரணவ மந்திரப்பொருளை குருவாக இருந்து உபதேசம் செய்து, சுவாமிக்கே நாதன் ஆனதால், இங்கே முருகப்பெருமான் சுவாமிநாத சுவாமி என போற்றப்படுகிறார்

இத்தகைய சிறப்பு பெற்ற தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக நடைபெறுவது வழக்கம், இந்நிலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து சுவாமிநாதசுவாமிக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு வைரவேல் ஆகியவற்றுடன் அருள்பாலித்த சுவாமியை நீண்ட வரிசையில் வந்து ஆயிரக்கணக்கானோர்  தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்றிரவு கொட்டிய மழைத்தூறலையும் பொருட்படுத்தாமல் தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும், தொடர்ந்து நேத்திரபுஷ்கரணியில் அழகிய பலவண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்திற்குள் சுவாமி எழுந்தருள, தெப்போற்சவமும் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here