சென்னை, நவ. 8 –
தம்பட்டம் நாளேட்டின் அறிவோம் ஆயிரம் பகுதியில் இன்று நாம் அறிமுகப்படுத்த இருப்பது, சமூக அக்கறையில் அடுத்தடுத்த நிலை சேவைகளை செய்து வரும் உயிர்த்துளி இரத்ததான சேவை குழுமம் அறக்கட்டளையைப் பற்றியதுதான்.
ஆம், ஏதோ ஒருவித உந்துதல் அல்லது சமூக அக்கறை, ஏதோ ஒருப் புள்ளியில் ஏற்பட்ட வலி இல்லையெனில் இன்னும் பிறருக்கு உதவும் நோக்கத்தின் வெளிப்பாட்டிற்கு என்னவெல்லாம் பொருள் கொண்ட வார்த்தைகள் உண்டோ அவரவர் கருத்தின் படி எது வேண்டுமென்றாலும் இவ்விடத்தில் வார்த்தைகளாக பொருத்திக் கொள்ளலாம்.
அப்படி ஒரு கணத்தில் வாட்சாப் குழு மூலம் ஆபத்தான சூழல்களில் பிறருக்கு இரத்ததானம் அளித்து சேவையாற்றிட முற்படும் சமூக அக்கறை கொண்ட நபர்களை ஒண்றினைத்து கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கப் பட்டதுதான் இந்த இரத்ததான சேவைக் குழும அறக்கட்டளை.
இதன் தொடக்கமே ஒரு விசித்திர அல்லது சவாலான பயிற்சியை சந்தித்தது எனச் சொல்லலாம். ஒரு தாயார் தனது மகளுக்கு மகப்பேறு காலத்தில் ஏ நெகட்டிவ் எனும் அரிய வகை இரத்த தேடலில் ஈடுப்பட்டு எங்கும் கிடைக்காத நிலையில் இவர்களின் வாட்சாப் குரூப் குழுவைத் தொடர்புக் கொண்டு கண்ணீர் மல்க ஈருயிர் போராட்ட நிலையை எடுத்துக் கூறிவுள்ளார்.
உடனடியாக வாட்சாப் குழுவில் காட்டுத் தீ போல் இச் செய்தியை பரவ விட்டு அவ் வகை இரத்தம் கொண்ட நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தாய் சேய் இருவரையும் காத்து உயிர் பிழைக்க செய்த அத்துளி காலமே இவர்களின் உயிர்த்துளி இரத்த்தான சேவை குழுமம் அறக்கட்டளைக்கான செயல் துவக்கப் புள்ளியாகும். இன்று வரை அவர்கள் பல்லாயிரக் கணக்கான உயிர்களை காத்து வரும் கடவுளாக பயனாளிகளின் பார்வையில் இவர்களுக்கான இடத்தை இச் சமூகம் இப்போது வழங்கி வருகிறது.
2011 ல் வாட்சாப் குருப்பில் தொடங்கிய இச் சேவை இன்று பரவலாக தமிழகம் முழுவதும் ஒரு அமைப்பாக இணைந்து சேவை செய்து வருகிறது. இன்று இச் சேவை அறக்கட்டளைக்கு கௌரவ தலைவராக திரு. காமராஜ் இ.ஆ.ப., அவர்களும் நிறுவனத் தலைவராக திரு அசோக் குமார், செயலாளராக திரு. முகமது ஜான் சா, பொருளாளராக திருமதி ரேச்சல், இணைத் தலைவராக திரு. ரஞ்சித் (கபாலி) இணைச் செயலாளராக திரு. தீனதயாளன், இணைச் செயலாளர் திருமதி .சண்முகப்பிரியா, இணை அமைப்பாளராக திரு.அசோக் குமார், ஒருங்கிணைப்பாளராக திரு. செல்வராஜ் வாசுதேவன், இணை ஒருங்கிணைப்பாளராக திரு .வினோத், இணை அமைப்பாளராக திருமதி .சுகந்தி பிரியா, திருமதி .பிரசன்ன லட்சுமி இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இதன் அடுத்தக் கட்டமாக தற்போது, முதியவர்கள் மற்றும் குடும்பத்தால் கைவிடப் பட்டோர்க்கு தினமும் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடுகள் செய்ய உள்ளதாகவும், மிகவும் கஷ்டப்படும் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், போன்ற ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு தொழில்களை தொடங்க இவர்களின் அறக்கட்டளையின் மூலம் உதவிகளை செய்ய ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். சாப்பாட்டுக்கு வழியில்லாமல் ரோட்டோரத்தில் இருக்கும் பல ஆதரவற்ற குடும்பத்திற்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்து, அதற்கான அடுத்தக்கட்ட சமூக அக்கறைக் கொண்ட பரிணாம வளர்ச்சியை நோக்கி செல்கின்றனர். இக்குழுவினரை நமது தம்பட்டம் அறிவோம் ஆயிரம் பகுதியில் அறிமுகம் படுத்துவதில் பெருமைப் படுகிறோம்.
மேலும் இச்சேவை குறித்த தகவல்களை அறிந்துக் கொள்ளவும், உதவிகள் தேவைப்படுவோர் கீழ் காணும் எண்களில் தொடர்புக் கொள்ளவும்