தமிழகம் முழுவதும் பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் திடீரென நேரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

 ஆவடி; அக்.20- திருவள்ளுர் மாவட்டதில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியுள்ள சூழ்நிலையில் மேலும் பரவாமல் தடுக்க மேல் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று  ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயில் சிவசக்தி நகர் பகுதிகளில் நேரடி திடீர் ஆய்வினை மேற் கொண்டார். உடன் மாவட்ட நகராட்சி நிர்வாக ஆணையர் உடன் ஆய்வில் பங்கேற்றார்.

 சமீப நாட்களாக ஆவடி அடுத்த திருமுல்லை வாயில் சிவசக்தி நகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. என்ற புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில் அது குறித்து ஆய்வு நடத்த திடீரென அப்பகுதிகளுக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவ்வாய்வில் ஆவடி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர் மோகன் ஆகியோரும் கலந்துக் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வரும் சுகாதார அடிப்படையிலான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக்கூறினர்.

மேலும் இப்பகுதிகளில் மழைநீர் தேங்கி அசுத்தம் நிறைந்து சுகாதார கேடு விளைவிக்க கூடிய இடங்களை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட நகராட்சி நிர்வாக ஆணையரும் குறிப்பிட்டு சுட்டிக் காட்டி அதன் மீதான நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள் என்று அறிவுறுத்தல் செய்தனர். மேலும் டெங்கு சுகாதாரத்துறை குழுவினர் வீடு வீடாக சென்று சுகாதார விழிப்புணர்வுகளில் ஈடுபடுகின்றனரா ? எனவும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அண்ணனூர் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

மேலும் ஆவடி பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆவடி மாநகராட்சிக்கு  சொந்தமான குடிநீர் மேல் தேக்கத்  தொட்டியில்  உள்ள தண்ணீரை ஆய்வு செய்ய வேண்டும் என உத்திரவு இட்டார். அருகே உள்ள சுகாதாரம் மற்ற இடங்களை 15 நாட்களுக்குள் சரியான முறையில் பராமரிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது பொறியாளர் வைத்தியலிங்கம் வருவாய்த்துறை அலுவலர் சோனியா துணைப் பொறியாளர் சங்கர் மற்றும் சத்தியசீலன் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் ஜாபர் தண்டுறை பகுதி ஆய்வாளர் பிரகாஷ் திருமுல்லைவாயில் பகுதி ஆய்வாளர் பிரகாஷ்  மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோரும் உடன் இருந்தனர்.

 

செய்தி; ஆவடி ராஜன்

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here