திருவாரூர், ஜன. 12 –

திருவாரூர் அருகே உள்ள சேந்தமங்கலம் பகுதியில் அமைந்துள்ள நேதாஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.

மேலும் இக்கல்லூரி சார்பில் இன்னும் ஒருசில் தினத்தில் வரவிருக்கும் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளை முன்னிட்டு, க்கல்லூரியின் வளாகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் குதுகலமாக சமத்துவ பொங்கலிட்டு வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.

மேலும், மாணவர்களும், ஆசிரியர்களும் வேட்டி சட்டை துண்டுகளோடும், மாணவிகளும், ஆசிரியைகளும் பல்வேறு வகையிலான சேலைகளை விதவிதமான வண்ணங்களில் உடுத்தி வந்திருந்தனர்.

தொடர்ந்து கல்லூரியில் உள்ள திடலில் பத்துக்கு மேற்பட்ட  மண்பானைகள் வைத்து கரும்புகள் ஊன்றி வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் வைத்து இப் பொங்கலை சாதிமதம் கடந்து சமத்துவ பொங்கலாகக் கொண்டாடினார்கள்.

மேலும் பொங்கல் பொங்கி வரும் போது “பொங்கலோ பொங்கல்” என்று முழக்கமிட்டும், பாரம்பரிய வகையில் கிராமத்தை நினைவூட்டும் வகையில் குலவைச் சத்தம் எழுப்பியும் கொண்டாடினார்கள்.

அதனைத்தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவிகள் பரதம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். மாணவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது . மாணவர்களும் மாணவிகளும் மேடையில் ஆடும் பொழுது கீழே நின்ற நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் உற்சாகப் பெருக்கெடுத்து அவர்களும் அவ் நிகழ்வோடு ஒன்றிணைந்தனர்.

மொத்தத்தில் ஆட்டம் பாட்டத்துடன் அக்கல்லூரியில் நடைப்பெற்ற அவ்விழா காண்போர் அனைவரையும் கிராமியச் சூழலுக்கு கொண்டு சென்று அங்கு நடைப்பெறும் பிரமாண்ட திருவிழாவை நினைவுப் படுத்தியதென்றால் மிகையாகது என்கிற வகையில் அக்கல்லூரி நிர்வாகம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்தும், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தும் நடத்தியிருந்தது அனைவரின் எண்ணங்களிலும் பளிச்சிட்டது.

பேட்டி : விஜயசுந்தரம் – இயக்குனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here