கும்பகோணம், ஜன. 6 –
108 வைணவ தலங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி தெப்போற்சவம் பதினோறு நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் இவ்வாண்டு ஓமைக்கிரான் தொற்று பரவல் அதிகரிப்பை தொடர்ந்து, தமிழக அரசு, மாநிலம் முழுவதும் கோயில் திருவிழாக்கள் எளிமையாக நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதுபோலவே வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று தினங்களிலும், திருக்கோயில்களில் பொது மக்கள் சுவாமி தரிசனம் செய்ய முழுமையாக தடைவிதித்துள்ளது
இந்நிலையில், நாச்சியார்கோவில் சீனிவாசப்பெருமாள் திருக்கோவில் மார்கழி தெப்போற்சவ கொடியேற்றம் இன்று, பெருமாள் தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் ஒலிக்க, நாதஸ்வர மேள தாளம் முழங்க, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கருடாழ்வார் சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றி வைக்கப்பட்டு கொடிமரத்திற்கும், பெருமாள் மற்றும் தாயாருக்கும் அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் பட்டாச்சார்யார்கள், ஊழியர்கள் மற்றும் குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்
கொடியேற்றத்தை தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வாக, நான்காம் நாளான 09ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை அரசின் ஊரடங்கு காரணமாக, பொது மக்களுக்கு தரிசன அனுமதியில்லாமல் பிரசித்தி பெற்ற கல்கருட சேவை நடைபெறுகிறது தொடர்ந்து 8ம் நாளான 13ம் தேதி வியாழக்;கிழமை வைகுண்ட ஏகாதசி அன்று, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு, சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்த குறைவான பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் பிறகு, 9ம் நாளான 14ம் தேதி வெள்ளிக்கிழமை தைப்பொங்கல் தினத்தில் தெப்போற்சவம் பதிலாக, திருக்கோயில் வளாகத்திலேயே பெருமாள் தாயாருடன் எழுந்தருள்வார் அன்றும் வெள்ளிக்கிழமை என்பதால், பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை பின்னர் 10ம் நாளான 15ம் தேதி சனிக்கிழமை சப்தாவர்ணமும், நிறைவாக 11ம் நாளான, 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடையாற்றியுடன் இவ்வாண்டிற்காண மார்கழி தெப்போற்சவம் இனிதே நிறைவு பெறுகிறது