பொன்னேரி, ஏப். 06

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில்  வட்டார மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது, இம் முகாமிற்கு பொன்னேரி சாராட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமை வகித்தார். மேலும், மாவட்ட மாற்று திறனாளி அலுவலர் பாபு, வட்டாட்சியர் செல்வகுமார், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்,

மேலும் இதில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு ட்ரை சைக்கிள், வீல் சேர், தையல் இயந்திரம், மூன்று சக்கர ஸ்கூட்டர், உள்ளிட்ட தேவைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர்,

மேலும் இம்முகாமில் முன்னதாக காது கேட்கும் மிஷின், மூக்கு கண்ணாடிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க கோரிக்கை விடுத்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இம்முகாமில் சார் ஆட்சியர் வழங்கினார்,

மேலும் இச்சிறப்பு முகாம்கள் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருவதாகவும், அதனை இக்கோட்த்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளி பயனாளிகள் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும் மாற்றுத்திறனாளிகளின் நலனில் தமிழ்நாடு அரசு மிகுந்த அக்கறை கொண்டு வருவதாகவும், அதனால் இப்பகுதியில் அவர்களுக்கான இதுப்போன்ற முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்,

மேலும் இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்துக் கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியரிடம் வழங்கினார்கள். இந்நிகழ்வின் போது உயர் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here