காஞ்சிபுரம், மார்ச். 13 –

கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில்  ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது

ஒவ்வொரு ஆண்டும் 14 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை மற்றும் மாலையில் ஏகாம்பரநாதர் பல்வேறு அலங்காரத்தில் அருள் பாலித்து வருகின்றார்

ஏகாம்பரநாதர் கோவிலில் 6 ஆம் நாள் திருவிழாவில் அறுபத்துமூன்று நாயன்மார்கள் திருக்கூட்டத்துடன் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளி மஞ்சள் நிற பட்டாடையில் அருள் பாலித்து வருகின்றார்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் காஞ்சிபுரம் நான்கு ராஜ வீதியில் வீதி உலா வருகின்றது. இந்த திருவிழாவில் பல்லாயிர கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை வெள்ளி தேரோட்டம் நடைபெறவுள்ளது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here