கும்பகோணம், மே. 15 –

கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் அங்கன்வாடி கட்டிடத்த்திறப்பு விழா நடைப்பெற்றது. அவ்விழாவில் பங்கேற்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி புதிய அங்கன்வாடி கட்ட டத்தை திறந்து வைத்து அரசின் திட்ங்கள் குறித்து உரை நிகழ்த்தினார். அப்போது அமைச்சர் எதிர் வரும் ஜூன் மாத இறுதிக்குள் 6 ஆயிரம் புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்படும் என தெரிவித்தார்.

கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, பாபநாசம் தாலுக்கா, கபிஸ்தலம் ஊராட்சிப் பகுதியில் உள்ள, வெள்ளாளர் தெருவில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் நிதியிலிருந்து ரூபாய் 10.92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் ஐ பெரியசாமி திறந்து வைத்து அரசின் திட்டங்கள் குறித்து உரை நிகழ்த்தினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான  கல்யாணசுந்தரம்,  மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அய்யாராசு, ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பு மகாலட்சுமி பாலசுப்ரமணியன், கோட்டாட்சியர் பூர்ணிமா, வட்டாட்சியர்கள் வெங்கடேஸ்வரர், பூங்குழலி, மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசு அலுவலர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவிக்கும் போது,

தஞ்சை மாவட்டத்தில் அதிக அளவில் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வருகின்றன. எனவும், மேலும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் 2021- 22 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மற்றும் நடைபெற்று வருகின்ற பணிகளை அனைத்தையும் இன்று காலை முதல் தான் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இப்பணிகள் அனைத்தையும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், மேலும் இன்றுக் காலை மறுங்குளத்தில் குழந்தை நேயப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்து, அதனை தொடர்ந்து பாபநாசம் ஒன்றியம், சக்கராப்பள்ளி ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்து, அதனை தொடர்ந்து தற்பொழுது கபிஸ்தலத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்துள்ளேன். என அப்போது அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், தமிழக முதல்வர் சுமார் ரூ. 823 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழகம் முழுவதும் 6000 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் தரமாக கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். எனவும், இந்த கட்டிடங்கள் அனைத்தும் பணிகளும் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் வருகின்ற ஜூன் மாத இறுதிக்குள் முடிவடைந்து அனைத்து பள்ளி குழந்தைகளும் புதிய வகுப்பறையில் பாடம் கற்பிக்க வேண்டும் என முதல்வர் எண்ணி இந்த திட்டத்தை அறிவித்தார். மேலும் இந்த வகுப்பறைகள் கல்லூரிகளுக்கு இணையாக உயரமாகவும் , அகலமாகவும் இருக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளார்

மேலும், முதல்வர் கிராம புற சாலை திட்டத்தின் கீழ் ஓராண்டில் பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்க 4000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்குண்டான ஆரம்பப் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது, குறிப்பாக கிராமப்புற சாலை திட்டத்தில் பல்வேறு சாலைகள் எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும், வருகின்ற ஜூன் முதல் வாரம் மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு பணிகள் துவங்கப்பட உள்ளன  என தெரிவித்தார்.

தொடர்ந்து, அமைச்சர் தெரிவிக்கும் போது, மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்டு வரும் அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. திமுக ஆட்சியில்தான் கட்டிடங்கள், சாலைகள் என தொடர்ந்து மக்கள் நலனுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனைத்தும் விடப்பட்டு வருகின்றன. என்பது குறிப்பிடத்தக்கதென அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here