திருவாரூர், டிச. 01 –

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை சுமார் 80 வருட காலமாக செயல்பட்டு வருகிறது. இதனால் நன்னிலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாப்பிள்ளை குப்பம், ஆனைகுப்பம் சோத்தக்குடி, சன்னாநல்லூர், மணவாளநல்லூர் உள்ளிட்ட சுமார் 48 கிராமங்களுக்கும் மேல் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் இம் மருத்துவமனையால்  பயன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது இம்மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலையில், பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் உள்ளிட்ட 11 மருத்துவர்கள் கடந்த காலங்களில்  பணிபுரிந்து வந்தனர்.

ஆனால் தற்பொழுது 3 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். குறிப்பாக, கண் சிகிச்சைமருத்துவர், பல் சிகிச்சைமருத்துவர் மற்றும் காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர் மட்டுமே பொது மருத்துவத்தையும் பார்த்து வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் அனைத்து வசதிகளுமே இருந்தும் போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலையே தற்போது நிலவி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், மகப்பேறுக்கான மருத்துவர்களும் இந்த மருத்துவ மனையில்  இல்லாத நிலை உள்ளது..

தினசரி இம்மருத்துவமனைக்கு 800 முதல் 1000 வரை வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைக்கு வரும் நிலையில்.. அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

எனவே தேவையான மருத்துவர்களை உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் நியமிக்க வேண்டும்  என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது..

இது குறித்து சமூக ஆர்வலர் சரவணன் தெரிவிக்கும் போது..

கடந்த ஆட்சியில்  11மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர்.. தற்பொழுது மூன்றே மூன்று மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.. உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் மருத்துவர்களை  நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.. எனவும் இந்த நிலை தொடரரும் பட்சத்தில், நன்னிலம் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக கூறினார்..

 

பேட்டி: செல் சரவணன்,

(சமூக ஆர்வலர்) நன்னிலம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here