திருத்துறைப்பூண்டி, டிச. 21 –

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், திருக்கொள்ளிக்காட்டில்  எழுந்தருளும் பொங்கு சனீஸ்வரர் திருக்கோயிலில், தனி சந்நிதி கொண்டும் கையில் ஏர் கலப்பையுடன் சனி பகவன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு சனிபகவான் இடம் பெயர்வார் அன்றையத் தினத்தினை சனிப்பெயர்ச்சி என அழைக்கப்பட்டு அந்நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்,

அதன் படி நேற்று சனி இடப் பெயர்ச்சியை முன்னிட்டு, காலை முதல் யாகபூஜைகள் அத்திருக்கோயிலில் நடைபெற்றது அதனை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சரியாக நேற்று மாலை 5.20 மணிக்கு மகர இராசியில் இருந்து கும்ப இராசிக்கு சனி பகவான் இடம் பெயர்ந்தார்.

அப்பொழுது மஹாதீபாரதணை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  சிறப்பு வருகையாக மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் திருக்கொள்ளிக்காடு கோவில் தக்கார்  முருகையன். செயல் அலுவலர் ஜோதி, ஆய்வாளர் ராஜேந்திர பிரசன்னா, ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக சிறப்பான  ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தனர்.

விழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு சனி பெயர்ச்சிக்கான  சிறப்பு தரிசன ஏற்பாடுகளும் செய்திருந்தனர். இவ்விழாற்காக  நூற்றுக்கு மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here