திருவள்ளூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
பூண்டி நீர் தேக்கம் பகுதியில் சுற்றுலாத்தலம் அமைப்பதற்கான 3 கோடி திட்ட மதிப்பீட்டில் அதற்கான செயல்திட்ட பணியினை நேற்று பூமி பூஜை போட்டு அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்க பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் அதன் கரையோர பகுதிகளான சதுரங்கப்பேட்டை ,மோவூர் கிராம பகுதியில் உணவாகம் , கழிப்பறை ,அணுகுசாலை உட்புற சாலை வாகன நிறுத்தமிடம் மின்னோக்கி வசதிகள் என சுமார் 3.33 ஏக்கர் பாரபளவில் சுமார் ரூ. 3 கோடி திட்ட மதிப்பீட்டில் திட்டம் வகுக்கப்பட்டு, அதற்கான செயல் திட்டப் பணிக்கான பூமி பூஜையை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்து பணிசிறப்பாகவும் விரைவாகவும் நடைப்பெற தனது வாழ்த்தினை தெரிவித்தார். அந்நிகழ்வின் போது அவருடன் மாவட்ட ஆட்சியர், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர், பொதுப்பணித்துறை உயர் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என திரளானவர்கள் இருந்தனர்.