திருவள்ளூர், பிப். 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பாரதி நகரில் அமைந்துள்ள பூங்காவினை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 24 லட்சம் மேம்படுத்தப்பட்டு, அதனை பொது மக்களின் பயன்பாட்டிற்காக இன்று சட்ட மன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சி 24-வது வார்டு பாரதி நகரில் அமைந்துள்ள பூங்காவினை நமக்கு நாமே திட்டம் 2022 – 23-ன் கீழ் பூங்காவை தனியார் (பெடரல் ) வங்கி  சமூக பொறுப்பு நிதி ரூ.8 லட்சம் மற்றும் நகராட்சி சார்பில் ரூ.18 லட்சம் என மொத்தம்  ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் அப்பூங்காவினை மேம்படுத்தி அதன் திறப்பு விழா இன்று அப்பகுதியில் நகர மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையிலும், நகராட்சி ஆணையர் சுபாஷினி, நகர்மன்ற துணைத் தலவைர் சி.சு.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் அவ் விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவள்ளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் பங்கேற்று, மேம்படுத்தப்பட்ட அப்பூங்காவினை பொது மக்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்.

திருத்தணி சட்ட மன்ற உறுப்பினர் சந்திரன், மற்றும்  நகர்மன்ற உறுப்பினர்கள் வசந்தி வேலாயுதம், நீலாவதி பன்னீர் செல்வம், கே.பிரபாகரன், அயூப் அலி, செல்வகுமரன், இந்திரா பரசுராமன், ஜி.கந்தசாமி, ஆர்.விஜயகுமார், நகராட்சி பொறியாளர்  ஏ.நடராஜன், உதவி பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ் மற்றும் நகர, ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளும், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பொது மக்கள் என திரளானவர்கள், அவ்விழாவில் பங்கேற்று மேலும் அவ்விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here