ஆர்.கே.பேட்டை, நவ. 8 –

ஆரோக்கிய கேடு ஏற்படுத்தும் விதத்திலும், மழைநீர் வடிகால்வாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் வகையிலும் வணிக வளாகம் முன் குப்பையைக் கொட்டி பல்வேறு தொற்று நோய்கள் உருவாக வழிவகுக்கும் சூழல் உள்ளது. இதனை ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாது தனது அலட்சியப் போக்கை கடைப் பிடிக்கிறது.

ஆர்கே பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி அமைந்துள்ள வணிக வளாகத்தின்  முன்பு அவ்வணிக வளாகத்தில் உள்ள வணிக மற்றும் பொதுத்துறை நிறுவனமான வங்கியும் அந் நிறுவனங்களில் உள்ள திடக் கழிவுகள் மற்றும் மக்காக் குப்பைகளை  தினசரி நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் நடைப் பாதையில் குப்பைகளை கொட்டி அசுத்தமாகவும், ஆரோக்கிய கேடு மற்றும் மழை நீர் வடிகால்வாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் விதமாக குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

 

இதனை வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் சுட்டிக் காட்டியும் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் அவ் வணிக வளாகத்தில் இயங்கும் நிறுவனங்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனை கவனிக்க வேண்டிய உள்ளாட்சி நிர்வாகமும் அதனை அப்புற படுத்துவதற்கும், குப்பைகளை வெளிப்புறத்தில் கொட்டி மாசு விளைவிக்க கூடியவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமலும் மவுனம் காட்டி வருவதை சமுக ஆர்வலர்கள் உள்ளாட்சி நிர்வாகத் திறன் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மேலும் இதுப் போன்று குப்பைகளை பொது இடங்களில் கொட்டி கடும் ஆரோக்கயம் மற்றும் மழைநீர் போக்குவரத்தை தடுக்கும் விதத்தில் நடந்து கொள்வோர்க்கு தங்கள் கண்டனத்தையும் தெரிவிக்கின்றனர். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழைநீர் தேங்கி பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் சந்திக்கும் நிலையில் இதுப்போன்ற அலட்சிய போக்கோடும் பொறுப்பற்ற தன்மைகளோடு, தொடர்ந்து நடந்துக் கொண்டிருப்பது மன வேதனை அளிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பு சென்னை பெரு நகர மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் நீர்நிலை பகுதிகளில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீதும் வணிக வளாகங்கள் மீதும்  அபராத தொகையாக ரூ. 500 முதல் திரும்ப திரும்ப இச்செயலில் ஈடுபடுவோர்கள் மீது அதிகப்பட்ச அபராத தொகையும் நடவடிக்கையும் எடுத்து வருவது குறிப்பிடத் தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here