மயிலாடுதுறை, ஏப். 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..

மயிலாடுதுறை நகரில் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த சிறுத்தை இடம் பெயர்ந்ததாக தகவல்.  மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சிவாய்  என்ற கிராமத்தில் சிறுத்தையின் கால் தடம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை மற்றும் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகரில் கடந்த 2ஆம் தேதி சிறுத்தை ஒன்று உள்ளே புகுந்தது சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது. கடந்த ஐந்து தினங்களாக மயிலாடுதுறை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் அடர்ந்த காடுகள் போல் உள்ள இடங்களில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி ஆய்வு செய்து வந்தனர். கடந்த மூன்றாம் தேதி கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை பதிவான நிலையில் வேறு எந்த தகவலும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், குத்தாலம் தாலுகா பாலையூர் காவல் சரகம் காஞ்சிவாய் என்ற ஊரில் சிறுத்தையின் கால்தடம் போல் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வனத்துறை காவல் ஆய்வாளர்  ஜெயச்சந்திரன் மற்றும் பொம்மன் தலைமையில் 3 வனக் காவலர்கள்  ஆய்வு செய்து வந்தநிலையில் சிறுத்தையின் கால் தடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு 12 மணிக்கு சிறுத்தை தென்பட்டதாக மாசிலாமணி என்பவர் அளித்த தகவலின் பெயரில் ஆய்வு செய்ததில் உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் பணியை மேற்கொள்ள வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

காஞ்சிவாய் கிராமம் நாட்டாறு ஆற்றின் கரையோர பகுதி என்பதால் நாணல் காடுகள் நிறைய உண்டு அதில் சிறுத்தை பதுங்கி இருப்பதற்கு வாய்ப்பு  இருப்பதாக கருதப்படுகிறது.

பைட்:-

மாசிலாமணி சிறுத்தையை நேரில் பார்த்தவர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here