இராசிபுரம், ஜூன். 19 –

மல்லசமுத்திரத்தில், தனிப்பட்ட சமுதாயத்தினர் வகித்து வரும் நிர்வாகத் திட்டத்தை ரத்து செய்து, அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களை உள்ளடக்கிய கமிட்டி குழு அமைத்து தேர் திருவிழா நடத்த வலியுறுத்தி அவ்வூர் திருக்கோயிலில் உள்ள  சுவாமிகளிடம் கோரிக்கை மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்காலத்தில் கட்டப்பட்ட, சோழீஸ்வரர், அழகுராயபெருமாள், செல்லாண்டியம்மன் கோவில்கள் உள்ளது. இக்கோயில்கள் அனைத்தும் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், இக்கோவில்களில் நிர்வாகம் சம்பந்தமாக, ஒரு தனிப்பட்ட சமுதாயத்தினருக்கும், ஊர்பொது மக்களுக்கும் இடையே பல வருடங்களாக கருத்து வேறுபாடு நீடித்து வருகின்றது. அதனைத் தொடர்ந்து இவ்வாண்டும் தனிப்பட்ட சமுதாயத்தினர் மட்டும் ஆனி மூல நட்சத்திரத்தன்று, தேர் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடைமுறையில் இருக்கும் தனிப்பட்ட சமுதாயத்தினர் மட்டும் வகித்து வரும் நிர்வாக திட்டத்தை ரத்து செய்து, ஈ.ஓ., தக்கார் நியமனம் செய்து,  அனைத்து சமுதாய உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி குழு அமைத்து தேர் திருவிழா நடத்த கோரி, மல்லசமுத்திரம் பெரிய மாரியம்மன் கோவிலில், அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஊர்மக்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக சென்று சோழீஸ்வரர், அழகுராய பெருமாள், செல்லாண்டியம்மன் திருக்கோயில் சுவாமிகளிடம் நூதன முறையில் கோரிக்கை மனு அளித்தனர்.

இதில், 500க்கும் மேற்பட்ட அனைத்துத் தரப்பு ஊர் மக்கள் கலந்து கொண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here