ராமநாதபுரம்:

ராமநாதபுரத்தில் ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க பொதுக்குழு மற்றும் வறட்சி நிவாரண நிதி வழங்க அரசை வலியுறுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தனியார் மகாலில் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க பொதுக்குழு மற்றும் வறட்சி நிவாரண நிதி விநியோகம் தொடர்பான கூட்டம் ராமநாதபுரத்தில் பாரதி நகரில் உள்ள தனியார் மகாலில் நடந்தது.

தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எம்.ஏ.அப்துல் முனாப் தலைமை வகித்தார். தென்னை விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ப.செல்லத்துரை, சிவகங்கை மாவட்ட தென்னை உற்பத்தியாளர் கம்பெனி சேர்மன் க.சேவுகபெருமாள் ஆகியோர் பேசினர். முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட செயலாளர் நா.மணிமாதவன், பொருளாளர் த.மோகன், துணை செயலாளர்கள் மு.தங்கச்சாமி, எஸ்.கந்தசாமி, துணைத் தலைவர் எஸ்.ஏ.அப்தாஹிர், நிர்வாகிகள் முன்னாள் ராணுவ வீரர் கோபால், பெருங்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஷேகு ரஹ்மத்துல்லா, சேதுக்கரை, பால்ராஜ், கருப்பையா உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தென்னை விவசாயிகளுக்கு 2017-18 ஆண்டு வறட்சி நிவாரண நிதி கிடைக்க துரித சங்க நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிதி ஒதுக்கிய தமிழக அரசு, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன், நாடாளுமன்ற உறுப்பினர் அ.அன்வர் ராஜா, மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், இலவச மின் இணைப்பிற்கு காத்திருக்கும் தென்னை விவசாயிகளுக்கு துரிதமாக இணைப்பு வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை ஆழப்படுத்த வேண்டும், நிலத்தடி நீர் வளத்தை பாதுகாக்க காட்டு கருவேல மரங்களை அகற்ற தொடர் நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here