திருவண்ணாமலை பிப்.15-

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் முன்மாதிரி பேரூராட்சியாக மாற, புதுப் பொலிவு பெற திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்காளர்கள் வாக்களியுங்கள் என புதுப்பாளையம் பேரூராட்சியில் நடந்த தேர்தல் தெருமுனை பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இவர்களை ஆதரித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட புதுப்பாளையம் பேரூராட்சியில் 9 வார்டுகளில் திமுக வேட்பாளர்களும் 3 வார்டுகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். புதுப்பாளையம் பேரூராட்சியில் 1வது வார்டு மல்லிகா அயோத்தி, 2வது வார்டு பானுபிரியா ராமதாஸ் 3வது வார்டு ரஞ்சித்குமார் ஆறுமுகம் 4வது வார்டு உமாபாக்கியராஜ் 5வது வார்டு மகேஸ்வரி சீனுவாசன் 6வது வார்டு மகேஸ்வரி முருகன் 7வது வார்டு ராஜலட்சுமி முருகன் 8வது வார்டு நித்யா ஜெயபிரகாஷ் 9வது வார்டு இளயரசி காந்தி 10வது வார்டு செல்வபாரதி மனோஜ்குமார் 11வது வார்டு அன்புசெல்வன் வெங்கடாஜலம் 12வது வார்டு சுதாகர் காசி ஆகியோரை ஆதரித்து திறந்தவேனில் தமிழக பொதுபணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதனை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவின் முதன்மையான சாதனை முதல்வராக திகழ்கிறார். ஆளுங்கட்சி திமுக அமைச்சர் திமுக இந்த தொகுதி எம்எல்ஏ திமுக எனவே புதுப்பாளையம் பேரூராட்சி தலைவரும் திமுக நீங்க திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் அரசின் திட்டங்கள் தங்குதடையின்றி கிடைக்கும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் 12 வேட்பாளர்களும் வெற்றிபெற வேண்டும்.

எந்த குழப்பமுமில்லாமல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் புதுப்பாளையம் புதுப்பொலிவு பெற்றுள்ளது எனவே முன்மாதிரி பேரூராட்சியாக மாறவும் புதுபொலிவு பெறவும் உதயசூரியன் சின்னத்திற்கும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஒதுக்கப்பட்ட சின்னத்திற்கும் இந்த பகுதி வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்.  15வது நிதிக்குழு மூலம் பூங்கா மேம்பாடு மற்றும் 8வது வார்டில் கல்வெட்டு பாதாள சாக்கடை திட்டம் புதிய பேருந்துநிலையம் அம்மா குளம் சீர்செய்ய வேண்டும்  மற்றும் அனைத்து இடங்களிலும் கால்வாய் அமைத்து தர வேண்டும் என புதுப்பாளையம் பேரூராட்சி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எனவே அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்  மேலும் தமிழகத்தில் ஸ்டாலின் மக்களாட்சி நடத்தி வருகிறார். இதனால் தான் கிராமம், பேரூராட்சி, நகராட்சி வளர்ச்சியடைகிறது. கடந்த 8 மாத காலத்தில் தேர்தல் வாக்குறுதிகள் 75 சதவிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த முறை தேர்தல் நடக்கும் முன்பு அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் திமுக ஆட்சி 5 ஆண்டு நிறைவடையும் போது இல்லம்தேடி தொகுதி தேடி அனைத்து திட்டங்களும் வந்து சேரும் எனவே இந்த தேர்தல் நம்ம ஊர் தேர்தல் இந்த பேரூராட்சி வளர்ச்சியடைய வாக்காளர்களாகிய நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரத்தின் போது மாநில மருத்துவரணி துணைத் தலைவர் டாகடர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்பி, பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பாரதி ராமஜெயம் மாவட்ட கழக துணை செயலாளர் சி.சுந்தரபாண்டியன் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் ஒன்றிய செயலாளர்கள் அ.சிவக்குமார் வழக்கறிஞர் சுப்பரமணி ஆறுமுகம் இளங்கோவன் காங்கிரஸ் கட்சி மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் கே.மோகன், மற்றும் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here