பொன்னேரி, மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், தச்சூர் புதிய கவரைபேட்டை காவல் நிலையம் அருகில் உள்ள நிலத்தில் வீட்டு மனை பிரிவு செய்து அதனை தனியார் ஒருவர் விற்பனை செய்ய உள்ளனர்.
இந்நிலையில் அவ்வீட்டு மனைப் பிரிவினை சுற்றிய மூன்று பக்கமும் மிகப் பெரிய நீரோடை பல மீட்டரில் அமைந்துள்ளது. மேலும் அந்த இடத்தின் அருகில் பல ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிர் சாகுபடிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர்.
அந்த நிலத்தின் உரிமையாளர்கள் ஓடையை ஆக்கிரமிப்பு செய்து வீட்டு மனை பிரிவு செய்து வருகின்றனர். வரும் மழைக் காலங்களில் கொசஸ்தலை ஆறு மற்றும் பிச்சாட்டூர் ஏரியில் இருந்து இந்த ஓடை வழியே மழை நீர் சென்று பொன்னேரி ஏரியில் மழை நீர் கலக்கின்றது.
அதனால் மனை பிரிவுகளிலும், ஊருக்குள்ளும் மற்றும் விவசாய நிலங்களிலும் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறை அவ்விடத்தை ஆய்வு மேற் கொண்டு நீர்நிலைப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியார் நிறுவனத்திற்கு அப்பகுதியில் வீட்டுமனைப் பிரிவிற்கான வரைப்பட ஒப்புதல் மற்றும் அனுமதியினை வழங்குவது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என உள்ளூர் மற்றும் மாவட்ட வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறை நிர்வாகத்தை வலியுறுத்துவதாக அம்மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது இந்திய சட்டப்படியான வெளிவர முடியாத நிபந்தனையற்ற கைது நடவடிக்கையை மேற் கொண்டு மற்றவர்களுக்கும் அது பாடமாக அமையும் படி செய்திடல் வேண்டும் .மேலும் அவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள நீரோடையையும் மீட்க வேண்டும் என வலியுறுத்திவுள்ளனர்.