கும்பகோணம், மார்ச். 17 –

கும்பகோணம் அடுத்துள்ள நாச்சியார் கோவில் பக்கம் உள்ளது துக்காட்சி கிராமம். இங்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல்லை கொள்முதல் செய்யப்படுவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புகாரைத் தொடர்ந்து அப்புகாரின் அடிப்படையில் நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் ஆய்வு நடத்தி வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 250  நெல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

துக்காட்சி கிராமத்தில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்றுடன் மூடப்படுகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள் வாங்கபடுவதாக நுகர்பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளருக்கு  தொடர்ந்து புகார்கள் சென்றன.

இதனைத் தொடர்ந்து கும்பகோணம் கோட்ட நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் இளங்கோவன் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக கோட்ட அலுவலகத்தின் கண்காணிப்பாளர் ஆகியோர் துக்காச்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 250 நெல் மூட்டைகள்   கொள்முதல் நிலையம் அருகே செழியன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கொட்டி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் அடுத்து கும்பகோணம் மண்டல நுகர்பொருள் வாணிபக் கழகத்தின்   மேலாளர் இளங்கோவன் அந்த 250 நெல் மூட்டைகளை பறிமுதல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் துக்காச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி எங்கும் பேசுப்பொருளாகிவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here