சென்னை, ஏப். 08 –
சென்னை வளசரவாக்கம், விசாலாட்சி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சிவமுருகன் (37), தனியார் தொலைகாட்சியில் ஆன்லைன் எடிட்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு தீபா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு மிகுந்த மன உளைச்சலில் இருந்த சிவமுருகன் அறைக்குச் சென்று தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அவரது மனைவி மற்றும் அக்கம், பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிவமுருகனை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிவமுருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த சிவமுருகன் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் மேலும் வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.