தேசிய அஞ்சலக வாரம்  09.10.2019 முதல் 15.10.2019 வரை அகில இந்திய அளவில் கொண்டாடப்படுகிறது. அதில் ஒரு நிகழ்ச்சியாக (12.10.2019) அன்று சிறப்பு தபால்தலை சேகரிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.

அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் உள்ள சிறப்பு தபால்தலை மையத்தின் சார்பாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு இடையிலான சிறப்பு வினாடி வினா போட்டி நடைபெற்றது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் இப் போட்டியில் பங்கேற்றனர். இதில் சென்னை தீவுத் திடலில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் செல்வன். ஆஷிஷ்குமார் முதல் பரிசினையும், சென்னை முகப்பேர் டிஏவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் செல்வன். எஸ்.நிதிலன் இரண்டாம் பரிசினையும், சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் உள்ள கே.சி.சங்கரலிங்க நாடார் மேல் நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் செல்வன் கௌதம் சிவா மூன்றாம் பரிசினையும் வென்றனர். அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தின் தலைமை அஞ்சலக அதிகாரி கனகராஜன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

மேலும், இப் போட்டியில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப் பட்டது. இந் நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த, தபால் தலை சேகரிப்பாளர்கள் சங்கத்தின் தென்னிந்திய செயலாளர் .மகேஷ் பாரீக் மற்றும் தபால்தலை சேகரிப்பாளர் .ஸ்ரீதரன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு தபால் தலைகளை இலவசமாக வழங்கினார்கள் என்று சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலக அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here