குடவாசல், மே. 04 –

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள வடக்கு தெருவைச் சேர்ந்த நீலமேகம் என்பவரது மகன் மோகன்ராஜ் வயது இருபத்தி ஆறு இவர் ஜியோ நெட்வொர்க் கம்பெனியில் சேல்ஸ் மேனாக பணியாற்றி வருகிறார்.

கடந்த வாரம் வீட்டின் அருகே உள்ள ஒரு கீற்றுக் கொட்டகையில் அமர்ந்து நண்பர்களுக்கு சிம்கார்டு விற்பனை செய்வதற்காக கொட்டகையில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது ஒரு பெரிய நல்ல பாம்பு அந்த இளைஞரை கடித்துள்ளது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து குடவாசல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் மோகன்ராஜ்க்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள அனைவரிடத்திலும் சோகத்தை ஏற்படுத்திவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here