மீஞ்சூர், மே. 11 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை வியாபரிகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், திருமண அரங்குகள், சினிமா தியேட்டர் மற்றும் பொதுமக்களும் உபயோகப்படுத்துவதை தவிர்த்திட வலியுறுத்தியும், அவற்றின் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பேரணி மீஞ்சூர் பேரூராட்சியின் இரண்டாவது வார்டு அரண்வாயில் பகுதியில் நடைப்பெற்றது.
இப்பேரணியில் மீஞ்சூர் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் சந்திரபாபு ஜெயின் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களும் ஒன்றிணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சார பேரணியை நடத்தினர்.
பேரணிக்கு இரண்டாவது வார்டு உறுப்பினர் அபூபக்கர் தலைமை வகித்தார் .மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு , துணைத் தலைவர் அலெக்சாண்டர். கிராம நிர்வாக அதிகாரி சாந்தி .சந்திர பிரபு ஜெயின் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முரளிதரன். உள்ளிட்டோர்கள் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணி அரியன்வாயல் பகுதியில் ஆரம்பித்து ஒவ்வொரு கடைகளிலும் விழிப்புணர்வு பிரச்சார ஸ்டிக்கர்களை ஒட்டியபடி மீஞ்சூர் பஜார் பகுதி வழியாக சென்று மீஞ்சூர் ரயில் நிலையத்தில் முடிந்தது இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு கைகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட பதாகைகளையும் கையில் ஏந்தியவாறு பிரச்சாரத்தில் விழிப்புணர்வு குறித்த சுலோகங்களை முழக்கமிட்டு இதில் ஈடுபட்டார்கள்.
இதில் பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் சுகன்யா. தலைமை எழுத்தர் அன்பரசு. சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் .அலுவலக ஊழியர்கள் மொய்தீன்கான். கோபி .சந்தானகிருஷ்ணன். நாகராஜன். ரவி. உள்ளிட்டோரும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் .























