குடவாசல், ஏப். 27 –
குடவாசல் அருகேவுள்ள பிலாவடி ஸ்ரீவனபத்ரகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைப்பெற்றது. அதில் 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேவுள்ள பிலாவடி பகுதியில் உள்ள ஸ்ரீ வனபத்ரகாளியம்மன் ஆலயத்தில்.. சித்திரை திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று இரவு வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.
பிலாவடி, கண்டிரமாணிக்கம், சீதக்கமங்கலம் உள்ளிட்ட 20 கிராமங்கள் சேர்ந்து நடத்தி வரும் இந்த சித்திரை திருவிழாவில் கரகம் மற்றும் பச்சைக் காளி, பவளக்காளி நடனத்துடன், ஸ்ரீவனபத்ரகாளியம்மன் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. வீடுகள் தோறும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து கோவில் எதிர்புறம் தீக்குண்டம் உருவாக்கப்பட்டு அதில் 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். இந்த தீமிதி திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.