இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த 2019 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் திறன் தேர்வு மாற்றியமைக்கப் பட்ட நாட்களில் நடக்கயிருப்பதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இராமநாதபுரம்; நவ.12-

2019–ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் (ஆண் மற்றும் பெண் சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி காவலர்களுக்கான உடற்திறன் தேர்வு வருகின்ற 18.11.2019 ம் தேதி முதல் நடைபெற உள்ளது .

2019-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் (ஆண் மற்றும் பெண்) சிறைக்காவலர்,தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1119 ஆண்கள், 309 பெண்கள் மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 911 ஆண்கள் மற்றும் 247 பெண்கள் ஆக  மொத்தம் 2586 விண்ணப்ப தாரர்களுக்கு இராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் தனித்திறன் மற்றும் உடற்திறன் தேர்வு கடந்த 06.11.2019 முதல் நடைபெற்று வந்தது.மேற்படி உடற்திறன் தேர்வானது, சட்டம் ஒழுங்கு காரணமாக கடந்த 09.11.2019-ம் தேதி முதல் அன்று ஒத்திவைக்கப்பட்டது.  

இந் நிலையில், 11.11.2019-ம் தேதியன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமத்தின் அறிவிப்பின்படி, மேற்படி உடற்திறன் தேர்வானது, வருகின்ற 18.11.2019-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இத் தேர்வானது, கடந்த 09.11.2019-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு 18.11.2019-ம் தேதி அன்றும், 11.11.2019-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு 19.11.2019-ம் தேதி அன்றும், 12.11.2019-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு 20.11.2019-ம் தேதி அன்றும் நடைபெற உள்ளது. மேலும், சான்றிதழ் சரி பார்ப்பு 21.11.2019-ம் தேதி நடைபெற உள்ளது. 

விண்ணப்ப தாரர்கள், இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அழைப்பு கடிதத்துடன்           (Call Letter), இராமநாதபுரம் மாவட்ட விண்ணப்பதாரர்கள் இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்திலும், சிவகங்கை மாவட்ட விண்ணப்ப தாரர்கள் சிவகங்கை மாவட்ட காவல் அலுவலகத்திலும் 13.11.2019, 14.11.2019, 15.11.2019 ஆகிய மூன்று நாட்களுக்குள் நேரில் சென்று, அழைப்பு கடிதத்தில் புதிய தேதியிட்ட முத்திரையை பதிவு செய்து கொள்ள வேண்டும்.  

 விண்ணப்பதாரர்கள் புதிதாக குறிப்பிட்டுள்ள தேதிகளில், புதிய தேதியிட்ட அழைப்பு கடிதத்துடன் சரியாக காலை 05.00 மணிக்கு இராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்திற்கு வர வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய தேதியில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். எக்காரணத்தைக் கொண்டும் மாற்று தேதிகளில்

அனுமதிக்கப்பட்டமாட்டார்கள். மேலும், காலதாமதாக வரும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக மைதானத்திற்குள் அனுமதிக்கப் படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்கு செல்போன் கொண்டுவர கண்டிப்பாக அனுமதி இல்லை. விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வு மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள், தாங்கள் பயிற்சி எடுத்த நிறுவனத்தின் பெயர், விளம்பரம் பொறித்த உடைகள் அணிந்து வரக்கூடாது. மேலும், வேறு எந்த அடையாளம் பொறிக்கப்பட்ட உடைகள் அணிந்து வரக்கூடாது. 

 உடற்திறன் தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தன்னிச்சையாக மைதானத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது. காவல்துறையினர் அனுமதித்த பின்னரே வெளியில் செல்லவேண்டும் என தேர்வு கமிட்டி தலைவர்  ரூபேஸ் குமார் மீணா, காவல்துறை துணை தலைவர் இராமநாதபுரம் சரகம் மற்றும் தேர்வு கமிட்டி உறுப்பினர் டாக்டர்.ஏ.வருண் குமார் காவல் கண்காணிப்பாளர் இராமநாதபுரம் மாவட்டம் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள். 

தனித்திறன் தேர்வில் பங்கேற்ற நாள்;

ஏற்கனவே உடற்தகுதி தேர்விற்கு அழைக்கப்பட்ட நாள் தற்போது உடற்தகுதி தேர்விற்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நாள்

  1. 1. 11.2019 – ஆண்கள் (இராமநாதபுரம் மாவட்டம்)

09.11.2019,  18.11.2019

  1. 2. 11.2019 – ஆண்கள் (சிவகங்கை மாவட்டம்)

11.11.2019,  19.11.2019

  1. 3. 11.2019 – பெண்கள் (இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள்)

12.11.2019,  20.11.2019

  1. சான்றிதழ் சரிபார்ப்பு

— 21.11.2019  

விண்ணப்பதாரர்கள் மேற்படி உடற்தகுதி தேர்வு சம்பந்தமான சந்தேகங்களுக்கு 04567 –  232243 என்ற தொலைபேசி காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி தொடர்பு கொள்ளலாம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here