ராமநாதபுரம், ஜூலை 12-
முந்தைய காலத்தில் மன்னர்கள் தங்கள் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் சுபிட்சமாக இருக்க கோயில்களையும், நீர் தேக்கங்களையும், தரிசு நிலங்களை விளையும் நிலங்களாகவும் ஆக்கி மக்களை மனம் குளிர வைத்திருந்தனர். அந்தவகையில் தற்போது பலரும் மக்களை ஏமாற்றி கோயில்களில் உள்ள விக்கிரங்களை சுரண்டவும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் எழுப்பவும், நிலங்களை வெளிநாட்டுகாரனிடம் விற்று கெமிக்கல் நிறுவனம் நிறுவவுமே செய்யும் நிலை காலப்போக்கில் உருவாகிவிட்டதால் மக்களுக்கு புதிய புதிய நோய்கள் உருவாகி வருவதுடன் தண்ணீருக்காக அள்ளாடும் நிலையும் ஏற்பட்டுள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை….

மன்னர்கள் ஆண்டார்கள் மக்களை காப்பாற்றினார்கள். அதேபோல் தற்போது மண்ணின் மைந்தர் வந்துள்ளார். மக்களை காப்பாற்றுவார். எப்போதெல்லாம் அதர்மம் தலைதுாக்குமோ அப்போது தர்மம் தலைகாக்கும். என்பதுபோல் தற்போது தண்ணீர் பிரச்னை என்பது 3வது உலக போரை உருவாக்கும்நிலைக்கு மாறிக்கொண்டு வருகிறது என விஞ்ஞான ரீதியாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதர்மம் தலைதுாக்காமல் இருக்க அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட நம் மண்ணின் மைந்தர் நமக்காக செய்யும் செயல்கள ஒரளவிற்காவது தெரிந்து கொண்டால் அவரது வழியில் நாமும் செல்ல ஏதுவாக இருக்கும்.

ராநாதபுரம் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமே வைகை:
வைகையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தண்ணீர் தேவைக்காக நமது மண்ணின் மைந்தர் எடுத்த கொண்ட முயற்சி ஒன்றா… இரண்டா… முதலில் கோடையில் நிலத்தடி நீர் குறையாமல் இருக்கவும், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கவும் தமிழக முதல்வரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரத்துக் கால்வாய்களை ஆக்கிரமிப்புகளை அகற்றி ராமநாதபுரம் மாவட்டத்தில் 64 கண்மாய்களில் தண்ணீரை சேமித்த புண்ணியவான் நமது அமைச்சர் டாக்டர் மணிகண்டன். இந் நிகழ்வு கடந்த 40 ஆண்டு கால சரித்திரத்தில் யாரும் செய்யாத அரிய செயல். இதனால் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மிகவும் பயனடைந்து மண்ணின் மைந்தரான அமைச்சரை வாயார வாழ்த்தாதவர்கள் இல்லை என்றே சொல்லாலம்.

தற்போது சத்தமின்றி கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க மலட்டாற்றில் தடுப்பணை:
மலட்டாறு என்பதை பற்றி சற்று தெரிந்து கொள்வோம்.

தென்பகுதியின் பெரும் நீராதாரமாக இருந்து வரும் வைகையால் பயன்பெற்ற கண்மாய்கள் பல இருப்பது போல் கிருதுமால் நதியம் சில ஆண்டுகளக்கு முன்பு வரை வைகையின்  செழிப்பில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை விளைவித்து விவசாயிகளின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தியது. வைகையின் கிளை ஆறுகள் அனைத்தும் உயிருடன்  (நீரோட்டத்துடன்) உள்ளன. ஆனால் உயிரற்ற நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு பரிதாப கிளை ஆறு  கிருதுமால் நதி.  இது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள குண்டாற்றின் உபநதி என அழைக்கப் பட்டாலும் இந் நதி வைகை ஆற்று தண்ணீரை பெற்று பல ஆயிரம் ஏக்கர்  நிலங்களை பசுமையாக வைத்திருந்தது. 74 கண்மாய்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளன . வைகை ஆற்றுத் தண்ணீர்தான் கிருதுமால் நதியிலும் வந்தது.

கிருதுமால் என அழைக்கப் படும் இந்நதி மதுரையின்  மேற்கு பகுதியில் உள்ள நாகமலையில் இருந்து உற்பத்தி யானதாக வரலாறு.  மதுரை நகர் பகுதியாக ஓடிய நதி  மதுரைக்கு வெளியே விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்துார், சாயல்குடி பகுதிக்கும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. முதுகுளத்துார் தாலுகா குண்டாற்றில் கலந்து மலட்டாறு என்ற பெயரில் வங்க கடலில் கலந்தது.
காலப் போக்கில் கிருதுமால் நதி கழிவுநீர் கால்வாயாக மாற. தற்போது குண்டாற்று வழியாகவும், வைகை வழியாகவும் மலட்டாற்றிற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆனால், மலட்டாற்றில் மழை காலங்களில் வரும் தண்ணீர் பயன்பாடின்றி வீணாக கடலில் கலக்கிறது. இதையறிந்த நமது மண்ணின் மைந்தர் மலட்டாற்று தண்ணீரை சேமிக்க திட்டம் வகுத்தார்.

சாயல்குடி மலட்டாற்று பகுதியில் தடுப்பணை:
மண்ணின் மைந்தரான அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தமிழக முதல்வரிடம் நமது மாவட்ட தண்ணீர் பிரச்னைகளை எடுத்துக்கூறி முதலில் சாயல்குடி மலட்டாற்று பகுதியில் ரூ.3.17 கோடி மதிப்பில் தடுப்பணை அமைக்க உத்தரவு பெற்று அதற்கான நிர்வாக அனுமதியையும் பெற்றுக்கொடுத்து தற்போது பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இதேபோல் இந்த தடுப்பணைக்கு முன்பாகவும் பெரிய ஆணை குளத்தில் ரூ.2.70 கோடி மதிப்பில் மேலும் ஒரு தடுப்பணை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. அதேபால் காக்கடி மலட்டாற்றில் ரூ.3.70 கோடி மதிப்பில் ஒரு தடுப்பணை அமைக்கப்பட்டு தண்ணீர் வீணாக கடலில் கலக்காமல் சேமிக்கும் திட்டத்தை அமைச்சர் கொண்டு வந்துள்ளார். இப்பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இப்பணிகள் முடிவடைந்து மழை காலம் துவங்கியபின் தண்ணீர் கடலில் கலப்பது தடுக்கப்படுவதுடன், சாயல்குடி, கடலாடி, முதுகுளத்துார் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உயர்ந்தவிடுவதுடன் தண்ணீர் தற்போதுள்ள உவர் நீர் நல்ல தண்ணீராக மாறிவிடும் நல்ல நிலை உருவாக போகிறது.

பலர் ஒவ்வொரு மக்கள் நலத்திட்டங்கள் நடக்கும் போதும் எதாவது ஒரு குறையை கூறியே திட்டத்தை தடுக்கப் பார்ப்பார்கள். ஆனால், நமது முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் அடிக்கடி கூறியது போல் “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்” என்ற உயர்ந்த சிந்தனையில் நமது மண்ணின் மைந்தர் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் நமக்காகவே உழைத்து கொண்டு இருக்கிறார் என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here