காஞ்சிபுரம், மார்ச். 12 –

காஞ்சிபுரம் மாநகராட்சியில் குடிநீருக்காக மக்கள் இனிப் போராடக் கூடாது மக்களின் தேவையறிந்து சேவையாற்றுங்கள் என அதிகாரிகளுக்கு மேயர் மகாலட்சுமி உத்திரவுப் பிறப்பித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் குடிநீர் தட்டுபாட்டைப் போக்க மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு ஆறுகளில் மேயர் மகாலட்சுமி ஆய்வு  காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகளில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடம் வீதிக்கு வந்து போராடுவது வழக்கமாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் திருபார்கடல் ஆறு மற்றும் சாலபோகம் வேகவதி ஆற்று பகுதிகளில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.

திமுக ஆட்சி காலத்தில் கலைஞர் முதல்வராக இருந்த போது திருபார்கடல் பகுதியில் இருந்து காஞ்சிபுரத்திற்க்கு முதல் முதலாக குடிநீர் கொண்டு வரப்பட்டது. இந்த குடிநீர் தேக்க தொட்டியை கடந்த பத்து ஆண்டுகளாக  முறையாக பராமரிக்காத காரணத்தினால் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு முறையாக குடிநீர் வினியோகிக்க முடியவில்லை, அதனை சரி செய்வதுக் குறித்து ஆலோசனை மேற் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இன்று அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டு பகுதியில் காலை மற்றும் மாலையிலும் குடிநீர் வழங்க வேண்டும்.

தற்போது கோடை காலம் துவங்கிவிட்டது இனி  மக்கள் குடிநீருக்காக போராடும் நிலை இனி உருவாக்க்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தேவைபட்டால், கூடுதலாக குடிநீர் தேக்க தொட்டியை கட்ட நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இவ்வாய்வின் போது, மேயருடன், துணை மேயர் குமரகுருநாதன், மாநகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here