பாபநாசம், ஏப். 19 –

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், பாபநாசம் அருகே உள்ள உம்பளம்பாடி ஊராட்சிக்குட்பட்ட இளங்கார்குடி பகுதியில் இரு நூறுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் குடும்பத்துடன் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதிகள் இல்லாமல் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத் தரக்கோரி அவ்வூராட்சி தலைவரிடம் கோரிக்கை மனுவளித்தும் இந்நாள் வரை எவ்வித முன்னேடுப்பு நடவடிக்கைகளையும் அவர் மேற்கொள்ளாமல் தட்டிக் கழித்து வருவதாகவும் மேலும் செய்து தர மறுப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் அவ்வினமக்கள் உடல் உபாதைகளைக் கழிக்க திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தவதால், சுகாதாரமற்ற சூழல் நிலவுவதாகவும், மேலும் குடிநீருக்காக சுகாதாரமற்ற ஆற்றுத் தண்ணீரை பருகுவதால் பெரும் தொற்று நோய்களுக்கு ஆளாகும் சூழல் உள்ளதாகவும்,  மேலும் கல்விப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மின் இணைப்பு இல்லாததால் இரவு நேரப் படிப்பையிழந்து, சூரிய ஒளியில் மட்டுமே தங்களது படிப்பை மேற்கொள்ள வேண்டியக் கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாகவும், அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதுக்குறித்து பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் எவ்வித நடவடிக்கையும் அவர்களும் மேற்கொள்ளவில்லை எனவும், குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இந்நிலை நீடித்தால் இப்பகுதி வாழ் மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் மேலும் எங்களுக்கான அடிப்படை வசதிகளை தொடர்ந்து புறக்கணிக்கும் நிலையினை உள்ளூர், வட்டார மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டால் தாங்கள் தொடர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுப்பட தயங்க மாட்டோம் எனவும் மேலும் இப்பிரச்சினைக் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக கவனத்தில் கொண்டு எங்கள் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் எனவும் அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

 

பேட்டி  :

1.மாலா – கிராமவாசி

2.வசந்தா – கிராமவாசி ( பெரிவங்க)  Blue saree

3.விஜயராகவன் – கிராம நாட்டாமை

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here