காஞ்சிபுரம், ஏப். 22 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து , 630 நாட்களுக்கு மேலாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக  ஏகனாம்புரம் மற்றும் நாகப்பட்டு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தேர்தல் நாளன்று வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி , அரசு ஊழியர்களின் குடும்பத்தினரும் வாக்களிக்க வேண்டும் என பேச்சுவார்த்தை மேற்கொள்ள வந்த பொழுது கிராம மக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்கள் போராட்டத்தை கண்டு கொள்ளாத நீங்கள் இன்று மட்டும் ஏன் வருகிறீர்கள் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

இந்தநிலையில் வட்டாட்சியர் கொடுத்த புகாரின் பெயரில் சுங்குவார்சத்திரம் போலீசார் 5 பிரிவின் கீழ் கிராம மக்கள் 10 பேர் மீது  வழக்கு பதிவு செய்துள்ளனர்.  சுப்பிரமணியன், கதிரேசன், கணபதி, பலராமன் , முனுசாமி, இளங்கோவன், கவாஸ்கர், சுதாகர், ஓம் பகவதி, விவேகானந்தன் ஆகிய 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here