தஞ்சாவூர், மே. 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…

தஞ்சை மாவட்டம், துலுக்கம்பட்டி கிராமத்தில் பனையேறிகள் பனை மரத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக பனை தொழிலுக்கு பயன்படுத்திய உபகரணங்கள், கள் பதனீர், தூங்கு ஆகியவற்றை வைத்து படையலிட்டு வழிப்பட்டனர்.

பின்னர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கள் பருகி பனை படையல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். பங்குனி, சித்திரை, வைகாசி இந்த மூன்று மாதங்கள் பனை காலமாகும். அம்மூன்று மாதங்கள் தங்களுக்கு  வாழ்வாதரம் பொருளாதாரம் அளித்த பனைக்கு நன்றி செலுத்தும் விதமாக தஞ்சை மாவட்டம் துலுக்கம்பட்டி கிராமத்தில் பனையேறிகள் பனை படையல் வைத்து விழா கொண்டாடினார்கள்.

பனை மரத்தின் அடியில் பனை தொழிலுக்கு உதவியாக இருந்த உபகரணங்கள். மற்றும் பனையில் இருந்து கிடைத்த உணவு பொருட்களான கள் கலையம், பதனீர், நுங்கு இவற்றுடன்  அசைவ சமையல் செய்து வைத்து படையலிட்டு சூடம் ஏற்றி வழிபட்டனர்.

பின்னர் கள் உணவு பொருள் என்பதை விளக்கும் வகையில் சிறுவர் சிறுமிகள், பெரியவர்கள் என அனைவரும் கள் பருகி பனை படையல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

விவசாயிகள் தை முதல் நாளை கொண்டாடுவது போல். பனை குடிகள் வைகாசி மாதம் ஒரு நல்ல நாளில் பனை படையல் விழா கொண்டாடுவதாக தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here