தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு …
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு குறுவை சாகுபடி 72,000 ஹெக்டர் பரப்பளவில் செய்யப்பட்டது. 2023 ஆண்டு குறுவை பருவத்தில் 76 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் 2,22,000 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 2023 ஆம் ஆண்டில் 1 லட்சத்து 39 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சம்பா சாகுபடி பொறுத்த வரை கடந்த ஆண்டு 2022-23 பருவத்தில் சம்பா சாகுபடி 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் நடவு செய்யப்பட்டு 5 லட்சத்து 19 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த கொள்முதல் பருவத்தில் 9.74 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யபட்டது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 44 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யபட்டது. ஆனால் இந்த ஆண்டு 2023-24 ல் சம்பா பருவத்தில் 1 லட்சத்து 35 ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்து ஒரு லட்சத்து 18 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே நடவு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த சம்பா காலடி பருவத்தில் 3 லட்சத்து 67 ஆயிரத்து 5 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு தற்போது வரை 5 லட்சத்து 6280 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் சுமார் 4 லட்சம் மெட்ரிக் டன் நெல் குறைவாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கிறது.