கும்பகோணம், ஜன. 22 –

தென்னக திருப்பதி என்றும், 108 வைணவ தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுவதுமான அருள்மிகு ஸ்ரீஒப்பிலியப்பன் திருக்கோயிலில் உள்ள அருள்மிகு ஸ்ரீவேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில் தை மாத திருவோண நன்னாளை முன்னிட்டு, இன்றிரவு ஸ்ரீபொன்னப்பர் சுவாமி, மற்றும் ஸ்ரீபூமிதேவி தாயாரும் அலங்கார தெப்பத்தில் எழுந்தருள, பகலிராப்பொய்கை திருக்குளத்தில் தெப்போற்சவம் நிகழ்ச்சி வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பத்தில் உலா வந்த சுவாமிஸ்ரீபெருமாளை, நான்கு கரைகளில் இருந்தப்படி பக்தர்கள் அவரது திருவுருவத்தினைக் கண்டு மனமுருகி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.

பக்தர்களால் கும்பகோணம் அருகேயுள்ள தென்னக திருப்பதி எனவும், திருவிண்ணகர் எனவும். போற்றப்படும் ஸ்ரீஒப்பிலியப்பன் திருக்கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலாகும்.

மேலும், இத்திருத்தலத்தில் உள்ள மூலவர் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்திலும், தாயார் பூமிதேவி வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும், மார்கண்டேய மகரிஷி அமர்ந்து கன்னிகாதானம் செய்யும் கோலத்திலும் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

மேலும் இத்தகைய சிறப்பு மிக்க இவ் வைணவ திருத்தலத்தில் தை மாத திருவோண நன்னாளை முன்னிட்டு, இன்றிரவு பல வண்ணங்கள் நிறைந்த பட்டு வஸ்திரங்களாலும், பல வண்ண நறுமண மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீபெருமாள், பொன்னப்பரும், பூமிதேவி தாயாரும் மின் விளக்குகளால் வடிவமைக்கப்பட்ட அழகிய தெப்பத்தில் எழுந்தருள, அப்போது நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் ழுழங்க, பகலிராப்பொய்கை திருக்குளத்திற்குள் மும்முறை உலாவரப்பெற்று தெப்போற்சவம் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பத்தில் தாயாருடன் உலா வந்த சுவாமி ஸ்ரீபெருமாளை நான்குகரைகளிலும் இருந்தபடி கண்குளிர கண்டு சுவாமிதரிசனம் செய்து அவர்கள் உளம் மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here