கும்பகோணம், ஏப். 23 –

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதமே பெரும் சிறப்புப் பெற்ற மாதமாக அவர்களால் போற்றப்படுகிறது. மேலும் அம்மாத்த்தில்தான் அவர்கள் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் அவர்கள் உணர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

மேலும், நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால்  வழங்கப்பட்டதும் இம்மாதத்தில்தான் என்பதால் இந்த மாதம் முழுவதும் அவர்கள் அனைவரும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மேலும் புனித ரமலான் மாத நோன்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில்  ரம்ஜான் ஈகைப் பெருநாள் நேற்று அவர்களால் கொண்டாடப்பட்டது.

மேலும் அதன் தொடர்ச்சியாக நேற்று கும்பகோணம் மாநகரில் உள்ள சாந்தி நகர் திடலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாவட்ட பொருளாளர் சாதிக், நகர பொருளாளர், ஹாஜா மைதீன், ஆகியோர் தலைமையில்  நடைபெற்ற சிறப்பு தொழுகையில் அவர்கள் புத்தாடைகள் அணிந்து பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். தொடர்ந்து தொழுகைக்கு பின்பு அவர்கள், ஒருவருக்கொருவர் கை கொடுத்தும், மேலும் கட்டித்தழுவிக் கொண்டும் ரம்ஜான் வாழ்த்துக்களை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டு அவ்விழாவினைக் கொண்டாடினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here