பொன்னேரி, ஏப். 18 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலூகா, ஆண்டார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது, பழமை வாய்ந்த ஆயிரம் வருடத்து அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியம்சுவாமி திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றதாகும்.
மேலும் இத்திருகோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 16 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கமாக நடைப்பெற்று வருகிறது. மேலும் அதுப்போன்று இவ்வருட சித்திரை பிரமோற்சவ விழாவினை முன்னிட்டு இன்று அத்திருக்கோயில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது இவ்வாண்டிற்கான 16 நாள் விழா தொடங்கியது.
மேலும் முன்னதாக இன்று 18 ஆம் தேதி காலை ஆறு மணி முதல் 7:30 மணிக்குள் சித்திரை மாத பிரம்மோற்சவம் திருவிழாவிற்காக கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற ஏராளமான முருகப் பக்தர்கள் அரோகரா என்று கோசமிட்டவாறு பக்தி பெருக்குடன் திருமுருகனை வழிப்பட்டனர்.
மேலும் இவ்விழாவினை முன்னிட்டு எதிர்வரும் 22 ஆம் தேதி காலை முதல் மாலை வரை பச்சை மயில் வாகனத்தில் அருள்மிகு திருமுருகப்பெருமான் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மேலும் அதனை முன்னிட்டு, அத்திருக்கோயில் நிர்வாகம் முருகப்பெருமானை தரிசிக்க வருகை தரும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகளை வெகுச் சிறப்பாக செய்து வருவதாக அத்திருக்கோயில் செயல் அலுவலர் மாதவன், பரம்பரை அறங்காவலர் ராஜசேகர் குருக்கள் உள்ளிட்டவர்கள் தெரிவித்தனர்.