கும்பகோணம், டிச. 06 –
கும்பகோணம் அருகே உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரமாக நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று இரவு சுவாமிமலை கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தீபமேற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர். மூலவர் சுவாமிநாதசுவாமி தங்கக் கவசம், வைர வேல் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். அதை போலவே உற்சவர் சண்முகர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.