தஞ்சாவூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து எதிர் வரும் மார்ச் 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 க்கு மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் சார்பாக மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என ஊரணி புரத்தில் பி.ஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள திருவோணத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் ஊரணி புரத்தில் சங்கத்தில் சேர்ந்த விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் விழாவில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கியும் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் சேர்த்தார்.
அப்பொழுது செய்தியாளரிடம் பேசிய காவிரி விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் கூறியதாவது :
டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகின்ற 10ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து 100 க்கும் மேற்பட்ட இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும். இந்த மறியல் போராட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.





















