திருவாரூர், ஏப். 08 –

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று (8.4.23) நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்திற்கு அதன் மாநிலத் தலைவர் மு.லெட்சுமிநாராயணன் தலைமை வகித்தார்.

மேலும், மாநிலப் பொருளாளர் இரா.குமார் அக்கூட்டத்திற்கு முன்னிலை வைத்தார். மேலும் இக்கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் விளக்கவுரை நிகழ்த்தினார்.

மேலும் இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அனுமதி, அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை, உயர்கல்வி ஊக்க ஊதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர் வரும் மே 2 ஆம் தேதி மாநிலத் தலைநகரான சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் நடைப்பெறவுள்ள உண்ணாவிரதத்தில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதனைத் தொடர்ந்து, விரைவில் நடைபெற உள்ள மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து முடிவு செய்வது எனவும் அக்கூட்டத்தில் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here